2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கல்வித்துறையை மேம்படுத்துவது தொடர்பான கூட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக ஆராயும் உயர்மட்டக் கூட்டம்  காத்தான்குடியிலுள்ள அல்மனார் அல் றாசித் மண்டபத்தில் நேற்று  வியாழக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் மூன்று கோட்டங்களில் 74 பாடசாலைகள் உள்ளன. இங்கு மாணவர் அடைவுமட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் அரசாங்க பொதுப்பரீட்சைகளில் உயர் சாதனை ஈட்டச்செய்வதற்குமான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டன. அத்துடன், பல்வேறு கல்வி மேம்பாட்டுத்திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது கடமைகள் தொடர்பாகவும் இங்கு அறிவுறுத்தப்பட்டதுடன், சட்ட விதிகள் குறித்தும் அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் கடந்த மூன்று ஆண்டு காலமாக தேசிய மட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்  பிரதி மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,  கோட்டக் கல்வி அதிகாரிகள், கல்விசார் இணைப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X