2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

உதவும் மையம் அங்குரார்ப்பணம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் வகையில் உதவும் மையம்  களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை  அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

ஒஸ்பாம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்; அக்கரைப்பற்றில் இயங்குகின்ற பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் அமைப்பின் ஆதரவுடன் களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இந்த உதவும் மையம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இப்பிரதேசத்திலிருந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு வரும் பால்நிலை தொடர்பாக ஏற்படும் வன்முறைகள், பெண்கள் மற்றும் சிறுமிகள்  தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளை கையாளும் தளமாக இம்மையம் செயற்படும்.

இவ்வாறன உதவும் மையம் வாழைச்சேனை வைத்தியசாலை, செங்கலடி வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் ஏற்கெனவே  இயங்கிவருகின்றது. 

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர், அரங்கத்தின் உத்தியோகஸ்தர்கள், வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X