2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாமரைக்கேணி வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து, நேற்று குடும்பஸ்தரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் கோவிந்தராஜா ராஜேந்திரகுமார் (வயது 29) என்பவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டதாக பொலிஸ் சார்ஜன்ற் ஏ.இஷற். ஹஸன் கூறினார்.

தானும் தனது பிள்ளைகள் நால்வரும் தொடர்ந்து பட்டினியால் வாடுவதாகவும் பிள்ளைகளின் பசிப்பிணியைப் போக்க மட்டக்களப்பு திராய்மடுவிலுள்ள தனது தாயிடம் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நேற்றுப் பிற்பகல் சென்றபோது கணவர் வீட்டிற்குள் சடலமாகக் கிடப்பதான தகவல் கிடைத்ததாகவும் மனைவி தர்மதா (வயது 28) பொலிஸ் வாக்குமூலத்தில் சாட்சியமளித்தார்.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X