2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டி, வான் மோதி விபத்து

Thipaan   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் இன்று (06) பகல் ஒரு மணியளவில் முச்சக்கர வண்டியும் வானும் மோதி வீதி விபத்து ஏற்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் வானும் முச்சக்கர வண்டியும்  மோதிக் கொண்ட போதும் அதிர்ஷ்ட வசமாக உயிராபத்துக்கள் நிகழவில்லை என்று பொலிஸார் கூறினர்.

முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணம் செய்த சந்திவெளியைச் சேர்ந்த எஸ். சிவரூபன் (வயது 26) என்பவர் காயமடைந்து சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து நேர்ந்தது குறித்து போக்கு வரத்துப் பொலிஸாரும் சோகோ (Scene of the Crime Officers) பொலிஸாரும் ஸ்தலததுக்குச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X