2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மதுபானக் களஞ்சிய சாலை திறப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் கட்டப்பட்டுள்ள மதுபானக் களஞ்சியசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, களஞ்சிய சாலைக்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் நேற்று மாலை (05) பொதுமக்கள் ஈடுபட்டனர்.

சுற்றுச் சுவரை உயரமாகக் கட்டப்பட்டுள்ள குறித்த வளாகத்தினுள் மதுபானங்களுடன் வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறிகளை வெளியேற்றக் கோரியே ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.

மர்மமான முறையில் கட்டடம் நிர்மாணிக்கப்படுகின்றது என ஊர் மக்கள் கையெழுத்திட்ட பிரதிகளை மாநகர சபை , பிரதேச செயலகம் மற்றும் அரச அதிபர் ஆகியோருக்கு 30ஆம் திகதிய கடிதத்தில் அறிவிக்கப்ட்டுள்ளது.

இவ் அறிவித்தலுக்கமைய மாநகர சபை  காணி உரிமையாளருக்கு களஞ்சியம் அமைப்பதற்கு அல்ல வதிவிடம் மற்றும் அலுவலகம் அமைப்பதற்கு அனுமதியளிக்கப்ட்டுள்ளது என 09.07.2014 கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

பிரதேச செயலகம் மதுவரி ஆணையாளர் (வருமானம்), இலங்கை மதுவரித் திணைக்களம் என்பவற்றுக்கு மதுபான களஞ்சியம் அமைக்க மாநகர சபை அனுமதியளிக்கவில்லை என அறிவித்துள்ளது.

அரச அதிபர் அவரது பதவிக் காலத்திலிருந்து எதுவித மதுபான சாலையோ மற்றும் களஞ்சியமோ அமைக்க அனுமதியளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸார் வந்து குறித்த லொறிகளையும் அனுமதிப் பத்திரத்தையும்  பரிசோதனை செய்து மதுபானங்களுடன் இருந்து லொறியை களஞ்சியத்தை விட்டு வெளியே அனுப்பிதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X