2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாணப் பணிப்பாளர் அலுவலகம் திறந்து வைப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சினால் 65 மில்லியன் ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாணப் பணிப்பாளர் அலுவலகம் மட்டக்களப்பு யாட் வீதியில் இன்று (06) திறந்து வைக்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாணப் பணிப்பாளர்  ரி. தர்மரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து மற்றும் பணிப்பாளர் நாயகம் டபிள்யு. எ. எஸ். வீரசிங்க ஆகியோர் அலுவலகத்தைத் திறந்து வைத்தனர்.

பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், அமைச்சின் செயலாளர் ஆர். டபிள்யு. ஆர். பேமசிறி, பணிப்பாளர்
(பராமரிப்பு) பி.கே. டி. திஸ்ஸர மற்றும் மட்டக்களப்பு அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர்  இந்து கருணாரெட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X