2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஏறாவூரில் விபத்து; நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 04 பேர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான நெடுஞ்சாலை வழியாகச்; சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஹோட்டலின் வழியாக நுழைந்து வீட்டுச் சுவரில் மோதி  விபத்துக்குள்ளானது.

ஹிங்குறாணையிலிருந்து வெலிக்கந்தைக்கு இந்த முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த ஹிங்குறாணை பன்சல வீதியைச் சேர்ந்த கபில ரட்னாயக்க (வயது 45), அவரது மனைவி தம்மிகா ஜெயந்தி (வயது 43), மகள் நுவந்திக்கா (வயது  19), தந்தை பண்டார விமலதாஸ (வயது 91) ஆகியோரே காயமடைந்தனர்.

ஏற்கெனவே விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள தமது உறவினரை பார்வையிடுவதற்கு சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  முச்சக்கரவண்டி உரிமையாளரான கபில ரட்னாயக்க தெரிவித்தார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X