2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கைவிடப்பட்ட களுவன்கேணி வீதி

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுவன்கேணி வீதி கடந்த 02 வருடங்களுக்கும்  மேலாக  செப்பணிடுவதற்கு பரப்பிப் போடப்பட்ட கற்களுடன் கவனிப்பாரின்றி கைவிடப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வந்தாறுமூலை புகையிரதக் கடவையிலிருந்து களுவன்கேணி கடற்கரைவரை சுமார் 03 கிலோமீற்றர் நீளமுடைய இந்த  வீதிக்கான புனரமைப்பு வேலை கடந்த முதலமைச்சர் காலத்தின்போது ஆரம்பிக்கப்பட்டது.  இருப்பினும்,   இந்த வீதியில்  அரைகுறையாக புனரமைப்பு வேலை முன்னெடுக்கப்பட்டு தற்போது   கைவிடப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

இந்த வீதியில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பயணிக்கின்றனர்.

இத்தனைக்கும் மத்தியில், கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது களுவன்கேணி வாசிகள் பிறிதொரு கட்சிக்கு வாக்களித்தார்கள் என்ற ஆத்திரமேலீட்டினால் எழுந்த பழிவாங்கலுக்காகவே இந்த வீதி புனரமைப்புச்  செய்யப்படாது இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது என்று தாம் கருதுவதாக களுவன்கேணி மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X