2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'மட்டு. மாவட்டச் செயலக நிர்வாகம் சிறப்பாக செயற்படுகின்றது'

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டச் செயலக நிர்வாகம் எந்தவித பாகுபாடுமின்றி சிறப்பாக செயற்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றமழான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் முஸ்லிம் பிரிவுக்கான கிராம உத்தியோகஸ்தர் எம்.சூரியபிரபா ஓய்வுபெற்று செல்வதையொட்டி அவருக்கு கௌரவிப்பு விழா ஹிழுறியா பள்ளிவாசல் மண்டபத்தில செவ்வாய்க்கிழமை (09) நடத்தப்பட்டது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மஞ்சந்தொடுவாய் கிராம அபிவிருத்திச் சங்கம், மஞ்சந்தொடுவாய் பெண்கள் சங்கம் உட்பட பொது அமைப்புக்கள் இந்த கௌரவிப்பு விழாவை நடத்தியது.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றது. எந்தவொரு பாகுபாடுமின்றி, இன வேறுபாடின்றி அதிகாரிகள் செயலாற்றி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்த மாவட்டத்தில் சிறந்;த நிர்வாகத்தை செய்து வருகின்றார்.

மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மாவட்ட செயலக கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ரங்கநாதன் இவ்வாறு இந்த மாவட்டச் செயலக உயரதிகாரிகள் அனைவரும் இன பாகுபாடின்றி சிறந்த சேவையை வழங்கி வருகின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமங்கள் தோறும் தங்களது  பார்வையை செலுத்தி தங்களது சேவையை வழங்கி வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். அந்த அடிப்படையில் இந்தப் பகுதி கிராம உத்தியோகஸ்தர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்து முஸ்லிம் பிரதேசமான இந்தப் பிரதேசத்துக்கு அவர் சிறந்த சேவையை வழங்கியுள்ளார்.  இவ்வாறான சேவையாளர்களே எமது சமூகத்துக்கு தேவையாகும். இவர் இந்தப் பகுதிக்கு கிராம சேவையாளராக கடமையாற்றிய காலத்தில் இந்தப்பகுதி மக்களை கவரும் வகையில் செயற்பட்டார்.

மாவட்ட செயலக உயரதிகாரிகளின் சிறந்த பாகுபாடின்றி செய்யும் சேவையை சில பிரதேச செயலாளர்களிடத்தில் காணவில்லை என்பது கவலையானதாகும். மட்டக்களப்பு மாவட்ட செயலக உயரதிகாரிகளின் சேவை மனப்பாங்கு பிரதேச செயலக அதிகாரிகளிடத்திலும் வரவேண்டும்' என்றார்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X