2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீடமைப்புக்கான மீளாய்வுக்கூட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட  இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்புத்திட்டம் பற்றிய முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்  மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வீடுகளின் கட்டுமானப்பணிகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தினுள் கட்டுமானப்பணிகளை நிறைவு செய்யுமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உத்தியோகஸ்தர்களுக்கு  பணித்துள்ளார்.

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின்  வீடமைப்புக்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 468 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட  இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்த உதவி வழங்கப்படுகின்றது.
அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக சேதமடைந்த 2,600 வீடுகளுக்கும் பகுதியளவில் சேதமடைந்த 4,167 வீடுகளுக்கும் வீடமைப்புக்கான நிதி வழங்கப்படுகின்றது.

முழுமையான சேதத்துக்கு 100,000 ரூபாய் நிதியும்  பகுதியளவான சேதத்துக்கு 50,000 ரூபாய் நிதியும்  வழங்கப்படுவதாக  மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், பிரதேச செயலகங்களின் அனர்த்த முகாமைத்துவப்பிரிவு உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X