2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கௌரவிக்கும் நிகழ்வு

George   / 2014 செப்டெம்பர் 11 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம். உதயகுமாரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (10) மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 48 உள்ளுராட்சி சபைகளில் போட்டிக்கு பங்கு பற்றிய 30 சபைகளில் முதலாவது இடத்திற்கு தெரிவு செய்யபட்டமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, ஆணையாளர் எம்.உதயகுமார், உதவி ஆணையாளர் என்.தனஞ்செயன், பொறியியலாளர் பி.அச்சுதன் மற்றும் கணக்காளர் ஜோன் பிள்ளை ஆகியோர் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சந்தியிலிருந்து வாகனப் பவனியாக காந்தி பூங்கா வழியாக மாநகர சபைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகம், வர்த்தக சங்கங்கள், பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் சுடிய சேவையினாலேயே இவ் வெற்றியைப் பெற முடிந்தது என ஆணையாளர் தெரிவித்தார்.

சிவில் சமூகம் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் ஆணையாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X