2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஒரு நாள் செயலமர்வு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காதி நீதிபதிகள் மற்றும் மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு வியாழக்கிழமை(11) நாவலடி ஹம்தான் ஹோட்டலில் நடைபெற்றது.

வாழைச்சேனை கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த செயலமர்வில் வாகரை பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி,  வாழைச்சேனை, ஓட்டமாவடி மத்தியஸ்த சபை உறுப்பினர்கள், காதிநீதிபகள் மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி எம்.ஏ.எம்.ஹக்கீம் விரிவுரைகளை நிகழ்த்தினார்.

இலங்கை மற்றும் ஆசிய நாடுகளிடையே முஸ்லிம் சட்டம் ஒரு ஒப்பீட்டு நோக்கு, இலங்கையில் காதி நீதிமன்ற முறைமையும் பிரச்சினைகளை கையாள்வதில் சுயாதீனமான நீதியும் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சமமான சந்தாப்பங்களும் திருமணம் மற்றும் விவகாரத்து தொடர்பான சட்ட ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் இங்கு விளக்கமளிக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X