2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

களுவாஞ்சிக்குடியில் டெங்கு ஒழிப்பு பரிசோதனை

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகர வடிகான்கள் அனைத்தும் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினரினால் வெள்ளிக்கிழமை (12) பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் மூன்று கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குதாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட நகரை மையப்படுத்தியதாக இச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் எஸ். ரவிராஐ; தலைமையில் களுவாஞ்சிகுடி பிரதேச  பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், கிராம சேவை உத்தியோகத்தர் எஸ். ரதீஸ்கரன், சமூர்த்தி உத்தியோகத்தர்களான யூ.குருபரன், என்.சத்தியசீலன் ஆகியோர் கொண்ட குழுவினரே இந்த பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர்.

இந்த பரிசோதனை நடவடிக்கையின் போது வடிகான்களில் சட்டவிரோதமாக கழிவு நீரினை விட்டமைக்காகவும் வடிகானுக்குள் மண்ணைக் கொட்டி நீர் வடிந்தோடுவதனை தடை செய்யும் வகையில் நடந்து கொண்டமைக்காகவும் களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள மூன்று கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் எஸ். ரவிராஜ் தெரிவித்தார்.

பொது இடங்களில் தேவையற்ற முறையில் குவிக்கப்பட்டிருந்த டெங்கு நுளம்பு பெருக்கத்தினை உருவாக்கக் கூடிய சில பொருட்கள் இனங்காணப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X