2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வரட்சி காரணமாக பால் உற்பத்தியில் வீழ்ச்சி

Thipaan   / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவும் கொடிய வரட்சி காரணமாக பால் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

புல் பூண்டுகளும் கருகி நீரும் வற்றி விட்டதால் உணவும் நீருமின்றி கால் நடைகள் மெலிந்து போயுள்ளதாக பண்ணையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்த இழப்புக்களால் கால்நடை வளர்ப்போர்  பொருளாதார ரீதியாகவும் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.

மாடுகள், எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் என தமது கால் நடைகள் நீரின்றியும் உணவின்றியும் அங்குமிங்கும் அலைந்து திரிந்து எலும்பும் தோலுமாகியுள்ளதாக அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக மேட்டு நிலப் பிரதேசங்களில் நீர்ப்பாசன குளங்களும் கிணறுகளும் நீர் நிலைகளும் நீர் இன்றி வற்றி வறண்டு போய் காணப்படுகின்றன.

குறிப்பாக  கிழக்கு மாகாணத்தில்   தற்போது நிலவும் வரட்சியான நிலைமை விவசாயிகளுக்கும் கால்நடை பண்ணையாளர்களுக்கும் அவர்களது தொழில் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

பால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி காரணமாக கால்நடை பண்ணையாளர்கள் பொருளாதார ரீதியில்  பெரும் இழப்புகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X