2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வரி அறவீடுகள் தொடர்பான கலந்துரையாடல்

Gavitha   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் வரி அறவீடுகள் தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை (22) மட்டக்களப்பு சத்துறுக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது.

ஆசிய மன்றத்தின் அனுசரனையில், ஆசிய மன்றத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார ஆளுகை நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளரும் மாகாண உள்ளூராட்சி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் வரி அறவீடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, முத்திரை வரி பெறுவதிலுள்ள நடைமுறை பிரச்சினைகள், அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.

மேலும் உள்ளூராட்சி மன்றங்களின் வரி அறவீடுகள் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பான விளக்கத்தை ஆசிய மன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.வலீத் நிகழ்த்தினார்.

இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், கிழக்கு மாகாண இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எம்.ஐ.எம்.மாஹிர், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல், ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் அலி சாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X