2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வெள்ள அனர்த்தத்தால் சேதமான வீடுகள் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  2012ஆம் 2013ஆம் ஆண்டுகளில் வெள்ள அனர்த்தத்தால்  சேதமடைந்த 6,767 வீடுகளுக்கான புனரமைப்பு வேலைகள் கடந்த ஜுலை மாதத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில், 60 சதவீதமான வீடுகளின் புனரமைப்பு வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியினுள் எஞ்சிய  வீடுகளின் புனரமைப்பு வேலைகள்  பூர்த்தியாக்கப்பட்டு விடுமெனவும் அவர் கூறினார்.

2012ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் 1,815 வீடுகள் முழுமையாகவும் 3,217 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன.  2013ஆம் ஆண்டு  ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் 785 வீடுகள் முழுமையாகவும் 950 வீடுகள் பகுதியளவிலும்  சேதமடைந்தன.

இவ்வாறு சேதமடைந்த வீடுகள் 468 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படுவதுடன், இதற்கான நிதியை  அனர்த்த முகாமைத்துவ அமைச்சு  வழங்கியுள்ளது.

முழுமையாக சேதமடைந்த வீடுகள் 100,0000 ரூபாய் செலவிலும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் 50,000 ரூபாய் செலவிலும் புனரமைக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வழிகாட்டல் மற்றும்; ஆலோசனையிலும்  இந்த வீடுகள் புனரமைக்கப்படுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X