2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்


மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இன்று புதன்கிழமை (24) நடைபெற்றது.

மட்டக்களப்பு மறைமாவட்ட சமூகத் தொடர்பு நிலையத்தின் ஏற்பாட்டில்;  'மனித உரிமைகளை மதித்து வாழ்வைப் பெறுமதியாக்குவோம்' எனும் தலைப்பில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. 

'கல்விசார் மனித உரிமைகள்' பற்றி கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் றூபி வலன்ரினா பிரான்சிஸ்ஸும் 'மனித உரிமைகளும் பெண்களும்' பற்றி பேராசிரியை சித்திரலேகா மௌனகுருவும் 'தொடர்பு சாதனங்களும் மனித உரிமைகளும்' பற்றி சட்டத்தரணி எப்.ஏக்ஸ்.எஸ். விஜயகுமாரும் உரையாற்றினர்.

புனித மிக்கேல் கல்லூரி, புனித சிசீலியா மற்றும் வின்சன்ட் தேசிய பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி ஆசிரிய மாணவர்கள் இதில் பங்கேற்றனர். பங்கேற்றவர்களால் மனித உரிமைகள் பற்றிய வினாக்கள் கேட்கப்பட்டு அவற்றுக்கு விளக்கமளிக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X