2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீதியோர வியாபாரத்துக்கு எதிராக நடவடிக்கை

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவஅச்சுதன்,எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு நகரில் வீதியோர வியாபாரங்களில் சட்டவிரோதமாக   ஈடுபடுபவர்களை தடைசெய்யும் முகமாக திடீர் நடவடிக்கையை மட்டக்களப்பு மாநகரசபையினர் இன்று புதன்கிழமை (24)  மேற்கொண்டனர்.

இதன்போது பழங்கள், வெங்காயம் உள்ளிட்டவற்றை மாநகர சபையினர் கைப்பற்றினர்.

ஏற்கெனவே பலமுறை எச்சரிக்கப்பட்டபோதிலும், தொடர்ந்து இவ்வாறு வியாபாரங்கள் முன்னெடுக்கப்படுவதால் இந்தத் திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

வீதியோரங்களில்  பொதுமக்களின் பாவனைக்குதவாத உணவுப்பொருள்கள்  விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ளது.  அதேநேரம் சூழலும் அசுத்தப்படுத்தப்படுகின்றது.  இதன் குப்பைகள் அருகிலுள்ள ஆற்றிலும் வடிகன்களிலும் வீசப்படுவதால் கிருமிகள் பரவுவதற்கும் டெங்கு நோய் பரவுவதற்கும் வாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X