2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொழில் வழிகாட்டல் பயிற்சி

Thipaan   / 2014 செப்டெம்பர் 24 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


அதிகரித்துவரும் வேலையில்லாப் பிரச்சினைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் நோக்குடன் ப்ரண்டினா தொழில் வளநிலையமும் வேள்ட்விஸன் பட்டிப்பளைப் பிரதேச அபிவிருத்தித் திட்டமும்  இணைந்து பட்டிப்பளைப் பிரதேச இளைஞர் யுவதிகளுக்காக தொழில் வழிகாட்டல் பயிற்சி ஒன்றை முனைக்காடு உக்டா சமூகவள நிலையத்தில் இன்று புதன்கிழமை (24) வழங்கினர்.

இதன்போது   பட்டிப்பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 30 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

வேள்ட்விஸன் நிறுவன கல்வித்திட்ட முகாமையாளர் சு.அமுதராஜின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ப்ரண்டினா தொழில்வள நிலைய மாவட்ட முகாமையாளர் ஜே.ஜே..பி.நிறோஸ் கலந்து கொண்டு இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சியை வழங்கினார்.

இளைஞர் யுவதிகள் எவ்வகையான தொழில்களைச் செய்வதற்கு ஆர்வமாகவுள்ளார்கள் என்பது பற்றியும் கேட்டறியப்பட்டன.

மேலும் இதன்போது  பட்டிப்பளைப் பிரதேசத்தில் காணப்படுகின்ற தச்சு, மேசன், அலங்கார வேலைகள், கைவினை வேலைகள், மற்றும் தையல் போன்ற தொழில்களை மேற்கொள்வது பற்றியும் இதன்போது இளைஞர் யுவதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X