2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாராட்டும் நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 24 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்,வடிவேல் சக்திவேல்

சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனை பாராட்டும் நிகழ்வும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர், புதிய பொதுச் செயலாளர் ஆகியோரை வரவேற்கும் பெருவிழாவும் எதிர்வரும் சனிக்கிழமை (27) காலை நடைபெறவுள்ளதாக இளைஞர் அணி செயலாளர் ந.துஷ்யந்தன் தெரிவித்தார். 

இந்நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி துளசி மண்டபத்தில் 9.மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா ஆகியோர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது பாராட்டுப் பெறும் பெருந்தகையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் வரவேற்பு பெறும் பெருந்தகைகள் இலங்கை தமிழ் அரசு கட்சியின்; புதிய தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, இலங்கை தமிழரசுக் கட்சியின்; புதிய செயலாளர் கி.துரைராசசிங்கம் ஆகியோர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X