2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தியை நோக்கிய வறுமைக்குறைப்பு பயிற்சி

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 25 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


'சம வசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவதனூடாக, இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களுக்கான நிலையான அபிவிருத்தியை நோக்கிய வறுமைக் குறைப்பு' எனும் தொனிப்பொருளில் பயிற்சிநெறி புதன்கிழமை (24) மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்றது.

இதில் ஏறாவூர்ப்பற்று வேர்ள்ட்விஷன் பிராந்திய அபிவிருத்தித்திட்டப் பிரிவில் கடமையாற்றும் சமூக நல ஊக்குவிப்பாளர்கள் 21 பேர் கலந்துகொண்டனர்.

'கமிட்' அமைப்பின் உள்வாங்கல் தொடர்பான திட்ட உத்தியோகஸ்தர் எஸ்.சக்தி தலைமையில் நடைபெற்ற இப்யிற்;சிநெறியில்; அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார செயற்பாடுகளை மேம்படுத்தும் வழிவகைகள் மற்றும் வலதுகுறைவு ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள், அதன் விளைவாக ஏற்படக்கூடிய சமூக பொருளாதார பின்னடைவுகள், மாற்றுத்திறனாளிகளையும் அவர்களுக்காக சேவை புரிபவர்களையும் உள்வாங்குதல் ஆகியன பற்றி  விளக்கமளிக்கப்பட்டன.

ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் ஹென்டிகப் இன்டர்நெஷனல் நிறுவனங்களின் நிதியுதவியுடன் 'கமிட்' அமைப்பு இத்தகைய பயிற்சிகளை வழங்கி வருகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X