2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆலோசனை கருத்தரங்கு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வாகனேரிப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இளவயதுத் திருமணத்தையும் பாடசாலை இடைவிலகலையும் தடுக்கும் வகையில் ஆலோசனைக் கருத்தரங்கு வியாழக்கிழமை  (25) மட்.வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேசசெயலகத்தின், சிறுவர், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், உளநல மருத்துவர் டாக்டர் ஜூடி ஜெயக்குமார், கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்தின் சிறுவர், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புப் அதிகாரி ஏ.ஆர்.எம்.குசைட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தில் கல்;விபயிலும் பாடசாலை மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில் இளவயதுத் திருமணத்தை தடுத்தல் மற்றும் உளவளத்துணை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துக்கள் என்பன மாணவர்கள் மத்தியில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்தாகும்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X