2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாவட்ட ரீதியான வலையமைப்பை உருவாக்குதல் தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பால்நிலை அடிப்படை வன்முறைகளைக் குறைப்பதற்கான மாவட்ட ரீதியான வலையமைப்பை உருவாக்குதல் தொடர்பான செயலமர்வொன்று இன்றைய தினம் (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்றது.

தேவை நாடும் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன், அமைப்பின் தலைமையக திட்ட இணைப்பாளர் அபிராமி ஜெயச்சந்திரன், சட்டத்தரணி திருமதி அருள்வாணி சுதர்சன், மாவட்ட இணைப்பாளர் திருமதி சங்கீதா தர்மரஞ்சன், உளவளத்துணையாளர் திருமதி ஜெயதீபா பத்மஸ்ரீ, கண்காணிப்பு உத்தியோகத்தர் திருமதி சந்திரா தியாகராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சிறுவர் பெண்கள் தொடர்பான விடயங்களில் சட்ட உதவி, ஆற்றுப்படுத்தல், கண்காணித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் இவ் அமைப்பின் தலைமையகம் கொழும்பிலும், அனுராதபுரம், கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம், புத்தளம், குருநாகல், மட்டக்களப்பு, உள்ளிட்ட மாவட்டங்களிலும் செயற்பட்டு வருகிறது.

இச் செயலமர்வில் மாவட்டத்தில் பெண்கள் தொடர்பில் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள், பொலிஸ் உத்தியேகாத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

இதன்போது எதிர்வரும் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படுத்தப்படவுள்ள பொலிஸ் நிலையங்களில் செயற்படும் பெண்கள் சிறுவர் பிரிவுகளை வலுப்படுத்தும் செயற்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X