2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மேச்சல் காணிகளில் அத்துமீறிய ஆக்கிரமிப்பு : துரைரெட்ணம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியில் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளை, அத்துமீறி ஆக்கிரமித்திருப்போரக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்ப்பில் அவர் தெரிவிக்கையில்,

மேய்ச்சல் தரை பண்ணையாளர்களின் முறைப்பாட்டையடுத்து, குறித்த பகுதிகளைத் நேரடியாச் சென்று பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்டத்தின் எல்லைப் பிரதேசங்களான மணல் ஏத்தம், வெட்டிப்போட்டசேனை, மயிலத்தமடு, மாதவணை, கறுவாச்சோலை, மாந்திரிஆறு, வடமுனை, ஓமடியாமடு ஆகிய காட்டுப் பிரதேச மேய்ச்சல் தரைகளை அப்பகுதி விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டேன்.

குறிப்பாக, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாதவணை, மாந்திரிஆறு, பகுதியிலுள்ள கந்தகம எல்லைக் கிராமத்தில் அம்பாறை மற்றும் பொலன்நறுவை ஆகிய வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 60 பெரும்பான்மை இன குடும்பங்கள் தற்காலிகக் கொட்டில்களை அமைத்து அங்கு தங்கியுள்ளனர்.

இவர்கள் மேய்ச்சல் தரைகளில் உழவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகளைப் பிடித்து கட்டி வைக்கின்றனர், சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுவதோடு அனுமதியில்லா துப்பாக்கிகளை வைத்திருந்து சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

எனவே இத்தகைய அத்துமீறிய குடியேறிகளால் அங்கு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோத  செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X