2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பிரதியைமச்சர் ஹிஸ்புல்லாஹ் முதன்மையானவர்: றிசாட் பதியுதீன்

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பிரதியைமச்சர் ஹிஸ்புல்லாஹ் முதன்மையானவர் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

காத்தான்குடியில் பிரதியரமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் சேவைகளை பாராட்டி 50 கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதை நூலான 'நதியைப்பாடும் நந்தவனங்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (26) நடைபெற்றது.

இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவரிடத்தில் மற்றவர்களை மதிக்கும் தன்மை காணப்படுவது அவரின் சிறப்பியல்பாகும். இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் அக்கறையுடன் செயல்படுகின்ற ஒருவர்.

சுனாமிக்குப்பின்னா ஈரான் வழங்கிய வீட்டுத்திட்டத்தினை அன்று மாகாண சபை அமைச்சராக ஹிஸ்புல்லா இருந்த போது, ஈரான் நாட்டு தூதுவருடன் பேசி சிறப்பாக அந்த வீட்டுத்திட்டத்தினை இங்கு செய்தார்.

யார் தன்னை தூசித்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் நாட்டு மக்களுக்காக தனது சேவையினை செய்து வருகின்றார்.

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலையை பிரதியைமச்சர் ஹிஸ்புல்லாஹ் அமைத்து வருவதுடன், எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களாலும் செய்யாத உலமாக்களுக்கான பல் கலைக்கழக கல்லூரி ஒன்றை நிறுவியுள்ளார் என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X