2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பட்டமளிப்பு விழா

Gavitha   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


மை ஹோப் நிறுவனத்தின் இணை நிறுவனமான சர்வதேச ஐவா தாதியர் தொழிற் பயிற்சிக் கல்லூரியின் மட்டக்களப்பு மற்றும் வவுனியா கற்கை நிலையங்களில் பயிற்சியினை பூர்த்தி செய்த தாதிய மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் சத்தியப்பிரமானமும்  சனிக்கிழமை (27) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

மை ஹோப் நிறுவனம் மற்றும் ஐவா தாதியர் கல்லூரி ஆகியவற்றின் முகாமைத்துவப் பணிப்பாளர் லயன் சித்தீக் நதீர் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரத்தினம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விஷேட சத்திரசிகிச்சை நிபூணர் வைத்திய கலாநிதி சித்தீக் ஜெமீல், அக்கரைப்பற்று வலயக் கல்விப் அலுவலக கணக்காளர் கே.றிஷ்வி யஹ்ஷர், உட்பட லயன்ஸ் கழக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்ட கற்கை நிலையங்களில் பயிற்சியினை முடித்து வெளியேறிய 110 தாதியர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது.

இதேவேளை, பயிற்சிக் காலங்களில் திறமைகளை வெளிக்காட்டியவர்கள், நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X