2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்குதல் தொடர்பான பயிற்சி நெறி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


இலங்கையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதிசெய்யும் நோக்கிலும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவும் உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்குதல் தொடர்பான பயிற்சிநெறி திங்கட்கிழமை (29) மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

சுவிற்ச் ஏசியா (ளுறவைஉhயளயை) நிறுவனத்தின் அனுசரணையோடு பிரக்டிகல் அக்ஸன் நிறுவனம் இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கற்கும் சுமார் 100 மாணவர்கள் இந்த இயற்கை வாயு தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வூட்டல் பயிற்சியில் பங்குபற்றினர்.

உயிர்வாயு தொழில்நுட்பம் பற்றி விழிப்புணர்வூட்டும் தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலான விழிப்புணர்வுத் நிகழ்ச்சித் திட்டங்களின் ஒரு அங்கமாக இந்தப் பயிற்சி இடம்பெற்றது.

உயிர்வாயு தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்கான திட்டமொன்றை தேசிய மற்றும் மாகாண ரீதியில் அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட முக்கிய பகுதிகளில் பயிற்சிப் பட்டறைகளும் அமர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X