2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெண்கள், சிறுவர்களுக்கான இல்லங்கள்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக பாதுகாப்பு இல்லம், பகல் நேர சிறுவர் பராமரிப்பு இல்லம் ஆகியன மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள நிலையில், இவற்றுக்கான அடிக்கற்கள்; நேற்று திங்கட்கிழமை (29) நாட்டப்பட்டன.

கள்ளியன்காடு பிரதேசத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் சிறுவர் பராமரிப்பு இல்லமும் சத்துருக்கொண்டான், கொக்குவில் பிரதேசத்தில் 12.3 மில்லியன் ரூபாய்  செலவில் பாதுகாப்பு இல்லமும் அமைக்கப்படவுள்ளன.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களை வன்முறையிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான விசேட வேலைத்திட்டத்தின் கீழ் இது  நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட பலர்; கலந்துகொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X