2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

லொறி குடைசாய்வு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா சந்தியில் பொருட்களை ஏற்றிக்கொண்டுவந்த லொறியொன்று இன்று செவ்வாய்க்கிழமை  குடைசாய்ந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து அம்பாறை வழியாக மட்டக்களப்புக்கு வந்த இந்த லொறியே விபத்துக்குள்ளானது. இதனால், லொறி சேதமடைந்துள்ளது. 
இதனால், சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த  வீதியால் பாரிய  வாகனங்கள் செல்லமுடியாதவாறு சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த  பொலிஸார், வீதியிலிருந்து லொறியை அப்புறமாக்கியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X