2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'சிறார்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது'

Thipaan   / 2014 ஒக்டோபர் 01 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்களை விட்டு விட்டு தாய்மார்கள் வெளிநாடு செல்வது இப்பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால் பாரிய பிரச்சனைகள் எழுந்துள்ளன. இவ்வாறு தாய்மார்கள் வெளிநாடு செல்வதால் சிறார்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் இன்று  புதன்கிழமை (01) தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு - செட்டிபாளையம், சிவன் கிட்ஸ் கோம் பாலர் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  சிறுவர் கண்காட்சியில், கண்காட்சிக் கூடத்தைத் திறந்து வைத்து பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்த கருத்து தெரிவித்த அவர்,

தாய் வெளிநாடு சென்று பல வருடங்கள் கழிந்த பின்னர் தனது தாயின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஒருவன் தாய் வராத காரணத்தால் தனது உயிரை மாய்த்துக்கொள்ள எத்தணித்திருந்த சம்பவம் ஒன்று அண்மையில் நமது நாட்டில்தான் பதிவாகியது. இதனை ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்தது.

ஆனால், எமது பகுதியில் பல தாய்மார்கள் கணவன், குழந்தைகளையெல்லாம் விட்டுவிட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு 10,000 தொடக்கம் 15,000 ரூபா வரைக்குமான சம்மளத்துக்;காக செல்கின்றார்கள்.

இதனால் இங்கு குழந்தைகள் பரிதவிப்பது மாத்திரமல்லாமால் வெளி நாடு செல்லும் பெண்களும் பல துன்பங்களை அந்நாடுகளில் அனுபவித்து வருகின்றார்கள்.

இதனால் இங்குள்ள கணவன். பிள்ளைகள் தவறான செயற்பாடுகளுக்குச் செல்லக்கூடிய சூழல் உருவாகின்றது. அதுமட்டுமல்லாமல் சிறுவர் துஷ்பிரயோகங்களும் இடம்பெறுகின்றன.

எனவே, இப்பிரதேசத்திலுள்ள எந்த தாய்மாரும் மத்தியகிழக்கில் கையேந்தக் கூடாது மாறாக தாய்மாருக்கா வாழ்வாதாரத்தை மேம்டுத்துவதற்கு எமது பிரதேச செயலகத்தினூடாக அதிகளவு நிதிகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றோம். 

பெண்கள் தங்களுடைய வாழ்வாதாரத் திட்டத்தை அடையாளப்படுத்தி எம்மிடம் தரும் பட்சத்தில் நாம் சமூர்த்தி திடத்தினூடாகவும் சமூகசேவைத் திணைக்கமூடாகவும் மாதர் கிராம அபிவருத்திச் சங்கங்களுடாக வேண்டியளவு நிதிகளைப் பெற்றுத்தந்து அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு உதவுவோம்.

 எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 லட்சம் ரூபாய் வரைக்கும் குறைந்த வட்டி வீத்தில் கடன் உதவிகளைப் பெற்றுத் தருவோம்.
இதனூடாக வெளிநாடு செல்லாமல் இங்குள்ள வளங்களைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

குழந்தைகளை சிறந்த முறையில் கற்பித்து வழிநடாத்தலாம் இதனூடாக அன்பு, விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு,  ஆதரவு, பெருகி சிறந்த முறையில் வாழலாம்.

குழந்தைககள் நமக்குக் கிடைக்கின்ற செல்வங்கள் அந்த செல்வங்கள்தான் எதிர்கால வளர்ச்சிக்கும் எதிர்கால பயன்பாடுகளுக்கும் உகந்த சக்தியாக மாறும்.

எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நல்ல பிரஜைகளாக உருவாக்க வேண்டுமாக இருந்தால். பெற்றோர்கள் சிறந்த முறையில்  குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

பிள்ளைகளை புத்தகப் பூச்சிகளாக வைத்துக் கொண்டிருக்காமல் கலை, கலைசாரம், மற்றும் சமுகத்தோடு ஒட்டி உறவாடுகின்ற சகல விடையங்களிலும், பங்கெடுக்கச் செய்து வளர்க்க வேண்டும்.

குழந்தைகளின் விருப்பத்துக்;கு ஏற்றவாறு விடவேண்டும், அவர்களைக் கட்டுப்படத்தக் கூடாது. எனவே, குழந்தைகளுக்கு சூழல் விருப்பத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இன்றய குழந்தைகள் எதிர் காலத்தில் சிறந்த தலைவர்களாக மாறுவார்கள்.

கடந்த காலங்களில் இப்பிரதேசத்தல் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் தொகை அதிகரிதிருந்தது. ஆனால், தற்போது மிக அண்மைக் காலமாக இப்பிரதேசத்தல் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் வீதம் குறைந்து கொண்டு வருகின்றது. இவற்றுக்கான காரணத்தை அறிந்து பெற்றோர்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X