2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாணவர்கள் புத்தகப்பூச்சிகளாக இருக்கக்கூடாது:தவநேசன்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

மாணவர்கள் சித்தியடைய வேண்டும் என்பதற்காக பாடப் புத்தகங்களை  மட்டும் படிக்கின்ற புத்தகப்பூச்சிகளாக இருக்கக்கூடாது. பல்துறைகளும் தெரிந்த பல்லூடகர்களாக திகழ வேண்டும். அப்போதே  சிறந்த எதிர்காலத்தை அடைய முடியும் என மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.தவநேசன் தெரிவித்தார்.

மகிழடித்தீவு பிரதேச  வைத்தியசாலையில் நடைபெற்ற வாணி விழாவின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'படுவான்கரை பிரதேசமானது நீண்டகால யுத்தத்தின் பின், விடுபட்டு இப்போதே  சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இதற்கு சான்றாக அண்மையில்; வெளிவந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எடுத்துக்காட்டியுள்ளது.

அது போன்று இச்சமூகம்,  மற்றைய சமூகங்களுடன் ஈடுகொடுக்கின்ற ஒரு சமூகமாக உருவாக வேண்டும். அப்போதே  சிறந்த கல்வி, பொருளாதாரம் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

பிள்ளைகளுக்கு சிறந்த ஒழுக்கக்கல்வியை ஆரம்பத்திலிருந்து வளர்க்க வேண்டும். அப்போதே சமூகம் அவரை மதிக்கும். பெற்றோர் கீழ்ப்படிவில்லாதவர்களாக காணப்பட்டால், பிள்ளைகளும்; கீழ்ப்படிவற்றவர்களாகவே காணப்படுவார்கள். இதை உருவாக்கியது அவர்களது பெற்றோர். ஆகவே மனிதநேய சமூகத்தில் மதிக்கப்படுகின்ற, எல்லோராலும் விரும்பப்படுகின்ற நல்ல குழந்தைகளை உருவாக்க வேண்டும். அவர்கள் ஊடாக இப்பிரதேசத்தை வளர்க்க வேண்டும்.

வைத்தியராக இருந்தாலும் சரி, பொறியிலாளராக இருந்தாலும் சரி, எந்த உத்தியோகஸ்தராக இருந்தாலும் சரி, இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களே சேவை செய்ய வேண்டும். அவ்வாறனவர்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்காக குழந்தைகளை அத்துறைகளுடாக வளர்க்க வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X