2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுற்றுலா தகவல் நிலையம் அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு நகரில் சுற்றுலா தகவல் நிலைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை நாட்டி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத்துக்கு முன்பாக இந்தக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமர், உதவி ஆணையாளர் எஸ்.தனஞ்சயன், ஆசியமன்றத்தின் இணைப்பாளர் எம்.சசிகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண சபையின் அனுசரணையுடன் ஆசிய மன்றம் மற்றும் கொய்க்கா நிறுவனம் என்பவற்றின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாநகர சபையினால் 17 இலட்சம் ரூபாய் செலவில் இக்கட்டடம் அமைக்கப்படவுள்ளது. 

மட்டக்களப்புக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மட்டக்களப்பிலுள்ள சுற்றுலாத்தளங்களின் விபரங்களை அறிந்துகொள்ளும் வகையில் இத்தகவல் நிலையக்கட்டடம் அமைக்கப்படவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X