2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் புதிய கட்டடம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலைக் கட்டடம் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் ஜெய்க்கா திட்டத்தினூடாக 25 மில்லியன் ரூபாய் செலவில்  3 மாடிகளைக் கொண்டதாக இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம், வைத்தியசாலை நலம்புரிச் சங்க செயலாளர் கே.பேரின்பநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிதாக திறந்துவைக்கப்பட்ட கட்டடத்தில் வைத்தியசாலையில் நடைபெறும் அனைத்து கிளினிக் சேவைகளும் இடம்பெறவுள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதியட்சகர் கு.சுகுணன் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X