2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மண்முனை கோயில்குளம் பகுதி அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்படும்: பிரசாந்தன்

Gavitha   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை கோயில் குளம் பகுதி தொல்பொருள் திணைக்களத்தினால் அகழ்வாராச்சிக்கு உட்படுத்தப்படவுள்ளதாக, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பி. பிரசாந்தன் தெரிவித்தார்.

கிழக்கின் முதலாவது சிற்றரசி உலகநாச்சியின் கோட்டையும் போத்துக்கேயரால் அழிக்கப்பட்ட இடிபாடுகளும் இப்பகுதியில் இருப்பதாக நம்பப்படுவதால், இதனை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.

கிழக்கு மாகாண சபை முன்னாள் முதல்வர் எஸ். சந்திரகாந்தனின் வழிகாட்டலின் பேரில் கடந்த 3 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சியின் பயனாக இந்த அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் சாத்தியமாகியுள்ளது என்று பிரசாந்தன் கூறினார்.

கி.மு 312ஆம் நூற்றாண்டளவில், மண்முனையினை இராட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்ததாகக் கூறப்படும் முதலாவது பெண் சிற்றரசி உலகநாச்சியின் கோட்டையும் அவரால் அமைக்கப்பட்டு  போர்த்துக்கேயரினால் உடைக்கப்பட்டதாக நம்பப்படும் காசி லிங்கேஷ்வரர் ஆலயத்தின் எச்சங்களையும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை தொல்பொருள் திணைக்களம் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வி. வாசுதேவனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X