2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தீயணைப்பு கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டின் கீழ்,  மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதுடன் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு உபகரணங்களும் இன்று (04) மட்டக்களப்பு மாநகர சபையினரிடம் கையளிக்கப்பட்டன.

இவ்வைபவத்தில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாஹீர் மௌலானா, ஆசிய மன்றத்தின் இணைப்பாளர் எம்.ஐ.எம்.வலீத், மட்டக்களப்பு மாநகர சபையின் உதவி ஆணையாளர், பொறியியலாளர், உத்தியோகஸ்தர்கள், மட்டக்களப்பு வரியிறுப்பாளர் சங்க பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தீயணைப்பு கட்டடத்துக்காக பத்து மில்லியன் ரூபாயும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு உபகரணங்க்காக 90 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X