2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'உளநோய்களோடு வெற்றிகரமாக வாழுதல்' எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு

Gavitha   / 2014 ஒக்டோபர் 04 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு உளவளத்துணை ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மேற்கு வலைய தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எஸ். ஸ்ரீதரன் தலைமையில் சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு உளவளத் துணையாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்றது.

'உளநோய்களோடு வெற்றிகரமாக வாழுதல்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தேசிய சமூக அபிவிருத்தி நிலையத்தில் கல்வி பயிலும் உளவளத்துணை நிகழ்ச்சி டிப்ளோமாதாரிகள் பங்கேற்றனர்.

கடந்த 2004 சுனாமி அனர்த்தத்ததிற்கு பின்னர் உளவளத்துணையின் அவசியம் உணரப்பட்டுள்ளதாக இதன்போது எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மேலும், ஆற்றுப்படுத்தலின் அவசியம் தொடர்ப்பில் சித்தரிக்கும்  குறுந்திரைப்படமொன்றும் இதன் போது வெளியீட்டு வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில், மனநல வைத்திய நிபுணர் கடம்பநாதன், எஸ்கோ நிறுவனப் பணிப்பாளர் பிரித்தியோன், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், மண்முனை மேற்கு வலய கல்விப் பணிப்பானர் கே. சத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X