2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மணல் வீதிகளை புனரமைக்கும் திட்டம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட மணல் வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05)  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மண்முனை தென்னெருவில்பற்று தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், சுமார் 700,000 ரூபாய் நிதியில் மேற்படி மணல் வீதிகளுக்கு களிமண் இட்டு புனரமைக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த, மண்முனை தென்னெருவில்பற்று தெற்கு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் என்.கணகரத்தினம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவரும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினருமான இ.வேனுராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X