2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வயோதிப பெண் படுகொலை

Thipaan   / 2014 ஒக்டோபர் 05 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கோழிக்கடை வீதியில் வயோதிபப் பெண்ணொருவர் இன்று(05) படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கோழிக்கடை வீதியில் தனியாக வசித்து வந்த றம்ழான் கலீமத்தும்மா (வயது 67) என்ற வயோதிபப் பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த மூதாட்டி தனியாக வாழ்ந்துள்ளதோடு வாழ்வாதாரத்துக்காக இடியப்பம், அப்பம் போன்ற உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளதோடு மீதப்பட்ட நேரத்தில் பன்புல் பாய் போன்றவற்றையும் பின்னி விற்பனை செய்து வருமானத்தையும் ஈட்டி வந்துள்ளார்.

இன்று மாலை அவரது வீட்டுக்கு சிறுமியொருவர் சென்றபோது, மூதாட்டி  கழுத்து வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் இதுபற்றிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X