2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Thipaan   / 2014 ஒக்டோபர் 06 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடிக் கடற்கரையோர புதருக்குள் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணொருவரின் சடலத்தை இன்று (06) மாலை மீட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சல்வார் அணிந்த நிலையில் காணப்படும் இந்தப் பெண்ணின் சடலம் சுமார் 30 வயது மதிக்கத்தக்கதாக இருக்கலாம் என தாம் ஊகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்கரையோர புதர்களுக்குள் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக விறகு வெட்டச் சென்றவர்கள், ஏறாவூர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில், தாங்கள் ஸ்தலத்துக்கு விரைந்து சடலத்தைக் கண்டு பிடித்ததாக் பொலிஸார் கூறினர்.

இந்தப் பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தாம் தீவிரப்படுத்தியிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X