2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுவர்களுக்கான பெருநாள் ஒன்று கூடல் பஸார்

Thipaan   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஹஜ் பெருநாளையொட்டி சிறுவர்களுக்கான பெருநாள் ஒன்று கூடல் பஸார் காத்தான்குடியில் நேற்று(06) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காததான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் சிறுவர்களுக்கான பெருநாள் ஒன்று கூடல் பஸாரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக் ஆரம்பித்து வைத்தார்.

காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், மற்றும் புதிய காத்தான்குடி அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சிறுவர்களுக்கான பஸார் நாளை புதன்கிழமை மாலையுடன் நிறைவு பெறவுள்ளதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X