2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

களுவாஞ்சிக்குடியில் உள்வீதிகள் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

'மகநெகும' திட்டத்தின் கீழ், களுவாஞ்சிக்குடி கிராமத்தில்  உள்வீதிகளை புனரமைக்கும் பணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால்  இன்று புதன்கிழமை (08) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

களுவாஞ்சிக்குடி கிராம அபிவிருத்திச் சங்கங்களூடாக முன்வைக்கப்படுகின்ற, பழுதடைந்த அனைத்து உள்வீதிகளையும் புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வெரு வீதிப் புனரமைக்கும்  சுமார் 10 இலட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

கொங்கிறீட் வீதிகள் அமைக்கமுடியாதென்பதுடன், கிறவல் வீதிகளே அமைக்கப்படும். எதிர்வரும் 04 மாதங்களினுள் இனங்காணப்பட்ட வீதிகளை இயன்றளவில் புனரமைக்கவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X