2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பொத்தானைக்குளத்தில் இன்று புதன்கிழமை (08) நீராடிய எம்.அம்ராஸ் என்ற 08 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை எம்.பி.சி.எஸ்.வீதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன், ஹஜ் பெருநாள் கொண்டாட்டத்தையிட்டு  பொழுதுபோக்கிற்காக குடும்பத்தவருடன் பொத்தானை வயல் பிரதேசத்துக்கு சென்றுள்ளான். பின்னர் பொத்தானைக்குளத்தில் நீராடியபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடனடியாக வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலைக்கு இந்தச் சிறுவனை  கொண்டுசென்றபோதிலும், காப்பாற்ற முடியாமல் போனதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X