2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திவிநெகும ஆறாம் கட்ட திட்டத்துக்கான நடவடிக்கை

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


திவிநெகும ஆறாம் கட்ட திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (20) ஆரம்பிக்கப்படவுள்ளமையை முன்னிட்டு, அதற்கான மரக்கண்டுகள் வெள்ளிக்கிழமை (10) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவுக்கான இம்மரக்கண்டுகளை காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் வழங்கி வைத்தார்.

இதன்போது காத்தான்குடி பிரதேச செயலப்பிரிவிலுள்ள கிராமங்கள் தோறும் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு வழங்குவதற்காக கிராம உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களிடம் இந்த மரக்கண்டுகள் வழங்கப்பட்டன.

இவ்வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலக கிராம உத்தியோகஸ்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.கோமலேஸ்வரன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மாதுளை மற்றும் எழுமிச்சை போன்ற மரக்கண்டுகள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X