2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ்- மட்டக்களப்பு பஸ் சேவை

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திருமலையூடான பஸ் சேவை இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு டிப்போவினால் வெள்ளிக்கிழமை (10) தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு டிப்போ முகாமையாளர் டி.மனோகரன் தெரிவித்தார்.

இப்பஸ் சேவை தினமும் மாலை 7 மணிக்கு  மட்டக்களப்பு பஸ் தரிப்பிடத்திலிருந்து புறப்படும். அதே போன்று தினமும் இரவு 9மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கியதான பஸ் வேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இச்சேவையானது தற்போது மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் கல்முனை வரை இந்த சேவை நீடிக்கப்படவுள்ளது.
மேலும், இச்சேவைக்கான ஒரு வழிகட்டணம் 530 ரூபாய் என முகாமையாளர் டி.மனோகரன் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X