2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இவ்வருட அபிவிருத்திக்கான நிதி டிசெம்பரினுள் செலவு செய்யப்பட வேண்டும்: முத்து சிவலிங்கம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இந்த வருட அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இந்த வருடத்தின் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியினுள் செலவு செய்யப்பட்டுவிட வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில்  அபிவிருத்தித்திட்டங்களின் மீளாய்வுக்கூட்டம் சனிக்கிழமை (11) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இந்த வருடத்தின் அபிவிருத்தி வேலைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இந்த வருடத்தின் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள்  செலவு செய்யப்பட்டுவிட வேண்டும். இதற்குள் அபிவிருத்தி வேலைகளும் நிறைவு செய்யப்பட்ட வேண்டும்.

இந்த வருட அபிவிருத்தி வேலைகளுக்காக அடுத்த வருடம்  நிதி விடுவிப்புச் செய்யப்படமாட்டாது. இதனால், இந்த வருடம் முடிவதற்குள் இந்த வருடத்துக்;குரிய அபிவிருத்தி வேலைகள் நிறைவு செய்யப்பட்டுவிட வேண்டும்.

இதை துரிதப்படுத்துவதற்காக மாவட்டங்கள் தோறும் நாங்கள் சென்று இவ்வாறான மீளாய்வுக்கூட்டங்களின் மூலம் முன்னேற்றங்களை ஆராய்ந்து இது தொடர்பாக துரிதப்படுத்தி வருகின்றோம்.

நான் மட்டக்களப்புக்கு வந்திருப்பதுபோல எனது மாவட்டமான நுவரெலிய மாவட்டத்துக்கு பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வருகைதந்து, அங்குள்ள அபிவிருத்தி வேலைகளின்  முன்னேற்றம் பற்றி ஆராய்வார்.

இவ்வாறு மாவட்டங்களுக்கு சென்று இந்த வருட  அபிவிருத்தி வேலைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த வருடத்துக்குரிய  நிதி செலவு செய்யப்படாவிட்டால், அந்த நிதி திரும்பிப் போய்விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு இடையில் இருக்கும் பேதங்களை மறந்து மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை  மக்களுக்காக செலவு செய்வதில் முழுமையாக அக்கறை காட்டுங்கள்.

பணத்தை அரசாங்கம் தந்துள்ளது. அதை நாம் சரியாக பயன்;படுத்தவேண்டும். அந்த வகையில், துரிதமாக அபிவிருத்த்p வேலைகளை மேற்கொள்ளுங்கள்' என்றார்.

இதேவேளை, இங்கு உரையாற்றிய  பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,

'மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை இந்த வருடத்துக்கு வழங்கப்பட்ட நிதியில் 20 சதவீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் இன்னும் ஒரு சதவீதமான நிதி கூட செலவு செய்யப்படவில்லை. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மீளாய்வுக்கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன். அங்கு சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு சதவீதமான  நிதி கூட செலவு செய்யப்படவில்லை.

அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 சதவீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம்  முடிவதற்கிடையில் அபிவிருத்தி வேலைகளை நிறைவு செய்ய அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X