2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வெடிமருந்துகளை வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பஸ் நிலையத்துக்கு  அருகில் வெடிமருந்துப்பொருட்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (12) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல் உடைக்கும் வெடிமருந்துப்பொருட்களை கொள்வனவு செய்து விற்பனையில் ஈடுபடுவதாக  கிடைத்த தகவலை அடுத்து, இவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வெடிமருந்துப்பொருட்களை வாகரை பிரதேசத்துக்கு கொண்டுசென்று மீனவர்களுக்கு விற்பனை செய்வதாகவும் பொலிஸாரின் விசாரணையிலிருந்து  தெரியவந்துள்ளது.

விசாரணைகளை மேற்கொண்டுள்ள வாழைச்சேனை பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X