2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வயோதிபப் பெண் கொலை; இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம். அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கோழிக்கடை வீதியில் கடந்த 05ஆம் திகதி 68 வயதான றம்ழான் கலீமத்தும்மா (ஆயிஷா பீபி) என்பவர்  வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்; தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக  பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இக்கொலைச் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டுவந்த வாழைச்சேனை பொலிஸார், சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளதோடு இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X