2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மண் சரிந்து விழுந்ததால் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.அஹமட் அனாம்


கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  மீராவோடை தமிழ்க் கிராம அலுவலகர் பிரிவில் புதிதாக  வெட்டப்பட்ட கிணற்றிலிருந்து   மண்ணை அகற்றிக்கொண்டிருந்தபோது  மண் சரிந்து விழுந்ததால், மேற்படி பகுதியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் முத்துலிங்கம் (வயது  42) என்பவர் மூச்சுத்திணறி  உயிரிழந்தததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இவருக்கு உதவியாக நின்ற மேற்படி பகுதியைச்  சேர்ந்த கணபதிப்பிள்ளை விஜயகுமார் (வயது  32) என்பவர் மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மாலை புதிதாக கிணறு வெட்டி  மண்ணை அகற்றிக்கொண்டிருந்தபோது, மண் சரிந்து கிணற்று மடுவுக்குள் விழுந்து இவர்கள் இருவரையும் மூடியது.

இந்த நிலையில், பொதுமக்களின் உதவியுடன் கணபதிப்பிள்ளை விஜயகுமார் மீட்கப்பட்டார். இருப்பினும், வேலாயுதம் முத்துலிங்கம் என்பவரை காப்பாற்றமுடியாமல் போனது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X