2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

George   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் நடமாடிய நபரொருவரை பிடித்து, பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(12) இடம்பெற்றுள்ளது.

கொடுக்கல் வாங்கலின்போது குறித்த நபர் கொடுத்த ஆயிரம் ரூபாய் நாணயத்தாளில் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உண்மையான ஆயிரம் ரூபாய் நாணயத்தாளுடன் சந்தேக நபர் கையளித்த ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர்.

அதன்போது குறித்த சந்தேகநபர் தப்பியோட முயற்சித்துள்ளார். எனினும் பொதுமக்கள் துரத்திச் சென்று சந்தேகநபரைப் பிடித்து பொலிஸாரிட்ம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, சந்தேக நபரிடமிருந்து மேலும், ஆயிரம் ரூபாய் போலித் நணயத்தாள்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் நிந்தவூரைச் சேர்ந்தவர் எனவும்  அவரை  நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடிவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X