2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,
கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வுகூடம் இன்று செவ்வாய்க்கிழமை (14) திறந்துவைக்கப்பட்டது.

கொய்க்கா நிறுவனத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் 4 மில்லியன் ரூபாய்  செலவில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வுகூடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் எஸ்.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொழில்நுட்பக்கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.ரஞ்சித், கொய்க்;கா நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சோஹுசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொழில் தேடலில் மாணவர்கள் முகம்கொடுக்கும் சவாலை எதிர்கொள்வதற்காக மாணவர்களிடையே தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திறனை வளர்க்கும் நோக்கில் இந்த் ஆய்வுகூடம் திறக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.ரஞ்சித் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் இங்கு உரையாற்றுகையில்,  

'இளைய சமுதாயம் தங்களுடைய மனோநிலைமை, ஆளுமை, திறமையை வளர்த்துக்கொள்வதற்கு ஒரு நுழைவாயிலாக தொழில்நுட்பக்கல்வியை பயன்படுத்தவேண்டும்.

சாதாரணதரம், உயர்தரம் படித்து சித்தி அடையாமல் அல்லது பல்கலைக்கழகம் செல்முடியாமல் தவிக்கும் மாணவர்களை இந்த தொழில்நுட்பக்கல்லூரி தனது பல்வேறுபட்ட பயிற்சிநெறிக்குள் உள்வாங்கி, அவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக மாற்றி, அவர்களை இந்த சமூகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த நாட்டின் அபிவிருத்திக்கும் துணைபுரிபவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதில் உண்மையாக இந்த மாவட்டம் சார்பாக நாம் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம்.

அதுபோல் கொய்க்கா நிறுவனத்தில் இருந்து வந்திருக்கின்ற நபர்கள் சேர்ந்து செய்திருக்கின்ற அர்ப்பணிப்பின் ஊடாக இந்தக் கல்லூரிக்கு தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் கிடைக்கப்பெற்றிருக்கின்றது. அதற்காக இந்த மாவட்டம் சார்பாகவும் மாவட்ட மக்கள் சார்பாகவும் நாம் அவர்களுக்கு இந்த நேரத்தில் விசேடமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஒரு தனி மனிதன் தன்னுடைய அர்ப்பணிப்பினால் இத்தகையதொரு பெறுமதிமிக்க சேவையினை வழங்கக் கூடியதாக இருக்கின்றது என்பது மிக மிக ஆச்சரியமான விடயம் எனவே தான் கொரியா நாடு தன்னுடைய தொழில்நுட்பத்திலும் அபிவிருத்தியிலும் விஞ்ஞானத்திலும் இன்று உலகம் திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு சாதனைகளை நிலைநாட்டியிருக்கின்றது.

எனவே இந்தவகையில் இங்கு இருந்து கொண்டிருக்கும் இளைய சமுதாயம் தாங்களுடைய மனோநிலைமைகளையும் ஆளுமைகளையும் திறமைகளையும் வளர்த்துக்கொள்வதற்கு ஒரு நுழைவாயிலாக இந்த தொழில்நுட்பக் கல்லூரியினை பயன்படுத்தி பல்வேறு சந்தர்ப்பங்கள் பல்வேறு நிறுவனங்களினூடாக வழங்கப்படும் சந்தர்ப்பங்களினூடாக இந்த மாவட்டத்தில் சிறந்த பிரஜைகளாக மாறுவதற்கு இத்தகைய சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும்.

அதேவேளை மாவட்ட செயலகம் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களினூடாக இவ்வாறான தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயில்பவர்களுக்கு  உதவிகளை வழங்குவதற்கு இருக்கின்றோம். மிக விரைவில் இது ஐரோப்பிய யூனியன் திட்டத்தினூடாக நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது' என்றார். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X